Home Featured கலையுலகம் “விஷால் ராதானா சொன்னேன்..விஷால் ரெட்டி னு தான சொன்னேன்” – ராதிகா சர்ச்சைப் பேச்சு!

“விஷால் ராதானா சொன்னேன்..விஷால் ரெட்டி னு தான சொன்னேன்” – ராதிகா சர்ச்சைப் பேச்சு!

788
0
SHARE
Ad

radhika1சென்னை – நடிகர் சங்க விவகாரத்தில், நடிகர் விஷாலை, ராதிகா, சாதி பெயர் சொல்லி (விஷால் ரெட்டி) அழைத்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம், அதை விட அதிக சர்ச்சை நிறைந்ததாக உள்ளது.

பிரபல ஊடகமான நக்கீரனில் வெளியாகி உள்ள அவரின் பேட்டியில், “நான் ஜாதிப் பற்றி பேசவில்லை. சமீரா ரெட்டியை எப்படி கூப்பிடுவது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை எப்படி கூப்பிடுவது. அந்த வகையில் நான் அவருடைய (விஷால்) அப்பா பெயரைத்தான் சொன்னேன்.”

“நான் விஷால் ராதா அப்படின்னா சொன்னேன். விஷால் ரெட்டி, உங்க அப்பா பெயர் ஜி.கே.ரெட்டி. அதைப்போல கார்த்தி சிவக்குமார் என்று சொன்னேன். உங்க அப்பா பெயரை மரியாதையாக கூப்பிட்டதற்கு இவ்வளவு பிரச்சனையா?” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ராதிகாவின் இந்த பேச்சின் மூலம், நடிகர் சங்க விவகாரம் சாதியைத் தாண்டி, நடிகர்கள் குடும்ப ரீதியாக ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து பேசத் தொடங்கி உள்ளதாகவே தோன்றுகிறது.