டாக்கா – வங்கதேசத்தில் நேற்று ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர். அந்த கொண்டாட்டத்தின் போது அவர்கள் நடத்திய ஊர்வலத்தில், தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குல் நடத்தினர். இதில் 12 வயது சிறுவன் பலியானான். 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதல்கள் அரங்கேறி வரும் நிலையில், அந்நாட்டு மக்களை அதிர்ச்சியூட்டும் விதமாக இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிரியா, ஈராக் போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள அந்த அமைப்பு, தற்போது ஆசிய நாடுகளை குறிவைத்துள்ளது.
வங்கதேசத்திற்குள் ஐஎஸ் அமைப்பு ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதால், அண்டை நாடான இந்தியாவிலும் அந்த அமைப்பு ஊடுருவ வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.