Home Featured தமிழ் நாடு “எப்பாடு பட்டாவது அதிமுகவை வீழ்த்துவேன்” – விஜயகாந்த் சபதம்!

“எப்பாடு பட்டாவது அதிமுகவை வீழ்த்துவேன்” – விஜயகாந்த் சபதம்!

525
0
SHARE
Ad

jaya- vijayakanthதர்மபுரி  – “எப்பாடு பட்டாவது அதிமுக-வை வீழ்த்துவேன்” என்று பொதுக் கூட்டம் ஒன்றில் விஜயகாந்த் சபதம் ஏற்றுள்ளார்.

தர்மபுரியில் நடந்த தேமுதிக மாநாடு ஒன்றில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், “காமராஜர் ஊட்டிக்கு சென்ற போது, தமிழக மக்களின் குடல் காயுது, உங்களுக்கு ஊட்டி, ஒரு கேடா என்று அன்று அண்ணாதுரை கேட்டார். இன்று நாங்கள், முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து கேட்கிறோம், தமிழக மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உங்களுக்கு கொடநாடு, ஒரு கேடா.”

“அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்காக எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்காததால், வெளிமாவட்டங்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் மக்கள் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்காக, வரும் சட்டசபை தேர்தலில் எப்பாடு பட்டாவது, அ.தி.மு.க., ஆட்சியை வீழ்த்துவேன்” என்று அவர் கூறியுள்ளார்.