Home Featured வணிகம் தனது பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை ஊழியர்களுக்கு கொடுத்த டுவிட்டர் தலைவர்!

தனது பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை ஊழியர்களுக்கு கொடுத்த டுவிட்டர் தலைவர்!

706
0
SHARE
Ad

founder-dorsey-twitterசான் பிரான்சிஸ்கோ – டுவிட்டர் நிறுவனத்தில் 300 ஊழியர்களின் வேலை நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி ஏறக்குறைய ஒருவார கால இடைவெளியில், ஊழியர்களை மகிழ்சிப்படுத்தும் விதமாக, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜேக் டோர்சேவிடமிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது டுவிட்டர் நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளில் மூன்றில் ஒரு பங்கினை ஊழியர்களுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பு ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

twitterஜேக் டோர்சேவிடமிருந்து வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு, டுவிட்டர் ஊழியர்கள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. டுவிட்டரின் முழு தலைமையும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட சில நாட்களிலேயே, டோர்சே பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டுள்ளதாக ஊடகங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன.