Home இந்தியா நல்ல ஓய்வு எடுங்க அப்புறம் ஜாமீன் கேட்கக் கூடாது – ஜெயாவிற்கு சு.சுவாமி அறிவுரை!

நல்ல ஓய்வு எடுங்க அப்புறம் ஜாமீன் கேட்கக் கூடாது – ஜெயாவிற்கு சு.சுவாமி அறிவுரை!

569
0
SHARE
Ad

subramanian swami longகோவை – முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படுவது உறுதி என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்து வருவது குறித்து சுப்ரமணிய சுவாமி இன்று அளித்துள்ள பேட்டியில், “பக்கத்தில்தானே இருக்கிறார் (கோவையிலிருந்து). நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) போய் பாருங்கள். அவர் சிறைக்கு போகப்போகிறார். நல்லா உடம்பை பார்த்துக்கொள்ளட்டும். அப்புறம் உடம்பு சரியில்லை என்று ஜாமீன் கேட்கக்கூடாது.”

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக தோற்றுப்போவார். அவர் ஜெயிலுக்கு போவது உறுதி. இம்முறை தப்ப முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.