மாலி – கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் சவுதியில் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மாலத்தீவு விமான நிலையத்தில் இருந்து தனக்கு சொந்தமான படகு ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது படகு திடீர் என வெடித்தது. இதில் அதிபரின் மனைவி காயமடைந்தார்.
இந்த சம்பவத்தில் பெரும் சதி இருப்பதாகக் கூறி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் மாலத்தீவு துணை அதிபர் அகமது அக்தீப்பிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு தலைநகர் மாலி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவரை, காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.