Home Featured உலகம் சீனாவில் 90% ஆண்களுக்கு ‘அந்த’ விசயத்தில் பிரச்சனையாம்!

சீனாவில் 90% ஆண்களுக்கு ‘அந்த’ விசயத்தில் பிரச்சனையாம்!

709
0
SHARE
Ad

shutterstock_191351504பெய்ஜிங் – சீனாவில் 70 % மக்களுக்கு அதிகமான மன அழுத்தம், மனச்சோர்வு காரணமாக உடலுறவில் திருப்தியின்மை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவு கூறுகின்றது.

இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 90% பேர் உடலுறவில் திருப்தி ஏற்பட்டு அதன் மூலம் தங்களது திருமண வாழ்வு சிறப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 40 % பேர் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு உடலுறவில் நாட்டமின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

26 முதல் 55 வயது வரையிலானவர்களிடம் சுமார் 72,000 கேள்விகளுடன் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. நேர்காணல் செய்யப்பட்ட 60% ஆண்களில் 50% பேர் அலுவலகப் பணியாளர்கள்.

மேலும், சீனாவில் 90% ஆண்கள் உடலுறவில் நாட்டமின்மை, உறுப்பு குறைப்பாடு, அதிக நேரம் உறவில் ஈடுபட முடியாத இயலாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பாரம்பரிய சீன மூலிகைகள் அல்லது வைத்திய முறைகளை நாடிச் செல்வதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகின்றது.