Home Featured நாடு குறுந்தட்டு மூலம் தமிழ் வழி மென்பொருள் கல்வி!

குறுந்தட்டு மூலம் தமிழ் வழி மென்பொருள் கல்வி!

737
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கணினி மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்களையும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற கணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு சொல்லாகும்.

இன்றைய கல்வி பரிணாம வளர்ச்சியில் இந்தச் சொல் திரைப்படச் சுருள்,நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது.

Tamil
இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழையசொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது;வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப்புலப்படாதது, அதாவது “தொட இயலாதது” என்பதைக் குறிக்கிறது.

#TamilSchoolmychoice

மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே,அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் ஒரு மென்பொருளை நம் மாணவர்கள் கற்க வேண்டுமென்றால் அவன் தன் தாய்மொழியில் கற்பது எட்டா காயாக இருந்தது. ஆனால், இதனையே கருத்தாக கொண்டு இன்று நம் தாய்மொழியான செந்தமிழில் தமிழ் வழி மென்பொருள் கல்வி எனும் கற்றல் குறுவட்டினை ‘டிஜிட்டல் மீடியா’ (கோயம்பூத்தூர், இந்தியா) என்ற நிறுவனத்தின் அயரா முயற்சியில் வெளியீடுச் செய்துள்ளனர்.

இந்தத் “தமிழ் வழி மென்பொருள் கல்வி” கீழ்க்காணும் மென்பொருளின் பயன்முறைகளை தமிழிலேயே விளக்கங்கள் கொடுக்கின்றன.

*Windows 7
*Windows XP
*Internet
*MS Word
*MS Excel
*MS PowerPoint
*Web Designing
*Adobe Photoshop
*Photoshop Studio Work
*Photoshop Effects
*CorelDraw
*Adobe Illustrator
*Adobe Premiere
*Adobe Flash
*Adobe Flash Effects
*AutoCAD
*3Ss MAX
*Maya
*Adobe PageMaker
*Tally
*C Programming
*C++ Programming
*Java

இந்தக் குறுந்தட்டை 24 மணிநேரமும் நாம் எங்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். இந்தக் குறுந்தட்டில் அனைத்து பாடங்களையும் தமிழில் துல்லியமாகவும் தெளிவாகவும் மிக நுட்பமாகவும் கற்றுக் கொடுக்கும் தகவல்கள் அடங்கியுள்ளன. இதனின் செயலாக்கம் சென்னையில் அமைந்துள்ளது.

கணினி மென்பொருள் கற்க மொழி ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்தக் குறுந்தட்டை வெளியீடு செய்துள்ளனர். இக்குறுந்தட்டின் விலை ஒன்றிற்கு RM30/= ஆகும்.

மலேசியாவில் மாணவர்கள் மத்தியிலும் தமிழ் ஆர்வாலர்கள் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் நோக்குடன் இதனை இங்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

இது பற்றிய மேல் விவரங்களுக்கு தனேசு பாலகிருட்டிணன் +6014- 327 9982 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.