Home Featured நாடு தேசிய முன்னணியுடன் இணைய விருப்பம் தெரிவித்தது பாஸ்!

தேசிய முன்னணியுடன் இணைய விருப்பம் தெரிவித்தது பாஸ்!

490
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – தேசிய முன்னணியின் பக்கம் பாஸ் தாவுவதற்கு வாய்ப்புள்ளதாக ஜசெக கூறிக்கொண்டிருந்தது தற்போது ஹாடி அவாங்கின் அறிவிப்பால் உறுதியாகியுள்ளது.

ஆளுங்கட்சியான தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஹாடி இது குறித்து கூறுகையில், “1974 மற்றும் 1978-க்கு இடையே ஒத்துழைப்பை வழங்குவதற்காக பாஸ் கட்சி கடந்த 1970-ல் கலப்பு அரசாங்கத்துடன் இணைந்தது. இது ஒரு தொடக்கம் அல்ல ஆனால் இது நாங்கள் எடுப்பது ஒரு புதுமையான அணுகுமுறை”

#TamilSchoolmychoice

“சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதமரைச் சந்தித்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து பேச விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஜசெக அல்லது பிகேஆர் என எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், நல்லதாகத் தெரிந்தால் இணைந்து செயலாற்றத் தயார் என்றும் ஹாடி தெரிவித்துள்ளார்.

புதிய எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் குறித்த உங்கள் பார்வை என்ன? என்ற கேள்விக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால்  தேர்தலில் தனிப்போட்டியிடவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஹாடி குறிப்பிட்டுள்ளார்.