Home Featured உலகம் மெல்பர்னிலுள்ள மலேசிய உணவுக்கடையில் ஆயுதமேந்திய நபரால் பரபரப்பு!

மெல்பர்னிலுள்ள மலேசிய உணவுக்கடையில் ஆயுதமேந்திய நபரால் பரபரப்பு!

616
0
SHARE
Ad

04997936மெல்பர்ன் – ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள லிட்டில் ஈப்போ என்ற உணவுக்கடையில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் இரண்டு மணி நேரமாக முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மலேசிய நேரப்படி 10 மணியளவில், குயின் ஸ்ட்ரீட் என்ற பகுதியிலுள்ள அந்தக் கடைக்குள் நுழைந்த அந்த நபர் ஆயுதம் கொண்டு அங்குள்ளவர்களை மிரட்டியதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில்,அங்கு வந்த மெல்பர்ன் நகர காவல்துறை, அந்நபருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, இறுதியில் அவரைக் கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த சம்பவத்தின் போது, உணவுக்கடையில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

படம்: நன்றி ஸ்டார் இணையதளம்