Home உலகம் மெல்பர்னில் பாதசாரிகள் மீது கார் மோதி 16 பேர் காயம்!

மெல்பர்னில் பாதசாரிகள் மீது கார் மோதி 16 பேர் காயம்!

697
0
SHARE
Ad

Melbournecarcrashமெல்பர்ன் – ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சாலையோரம் பாதசாரிகள் நடந்து போகும் நடைபாதையில் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் குழந்தை உட்பட 16 பேர் காயமடைந்தனர்.

இதில் தலையில் பலத்த காயங்களுடன் அக்குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கின்றனர் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.