மெல்பர்ன் – ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் இடம் கொண்டு வர வேண்டி பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் அந்நாட்டைச் சேர்ந்த 62.5 விழுக்காட்டினர், அதாவது 10 மில்லியன் ஆஸ்திரேலியப் பிரஜைகள் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததையடுத்து, அந்நாட்டில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவிருக்கிறது.
இது குறித்து குடிநுழைவு அமைச்சர் பீட்டர் டூட்டன் புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆமாம்’ வாக்குகள் வெற்றியடையப் போகிறது என்று தெரிவித்தார்.