Home உலகம் டிரம்பால் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க எம்பி கருத்து!

டிரம்பால் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க எம்பி கருத்து!

861
0
SHARE
Ad

donald trump(N)வாஷிங்டன் – வடகொரியாவின் அத்துமீறிய அணு ஆயுதச் சோதனைகளால் அமெரிக்கா தொடர்ந்து ஆத்திரமடைந்து வருகின்றது.

வடகொரியாவை அழிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.

இதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கு இடையில் போர் மூளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவை எதிர்கொள்ள வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுதங்களைத் தயார் செய்து வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாப் கார்கர், டிரம்பின் இது போன்ற பேச்சுகளால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகக் குறிபிட்டிருக்கிறார்.