Home நாடு சிகிச்சையில் சபா வாரிசான் அந்தோணி- தடுப்புக்காவல் நீட்டிப்பு!

சிகிச்சையில் சபா வாரிசான் அந்தோணி- தடுப்புக்காவல் நீட்டிப்பு!

977
0
SHARE
Ad

PETER ANTHONYகோத்தா கினபாலு – கிராமப்புறத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 7.5 பில்லியன் ரிங்கிட்டில், 1.5 பில்லியன் ரிங்கிட் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் பார்ட்டி வாரிசான் சபா கட்சியைச் சேர்ந்தவர்களில் ஒருவரான,  டத்தோ பீட்டர் ஆண்டனி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது மயக்கம் வருவதாக அவர் கூறியதையடுத்து, மலேசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவருக்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.