Home இந்தியா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!

சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!

839
0
SHARE
Ad

sasikala-visiting-nadarajan-07102017சென்னை – 5 நாட்கள் பரோல் நேற்று புதன்கிழமையோடு நிறைவு பெற்றதையடுத்து, சசிகலா மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த 5 நாட்களும் இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீட்டில் தங்கியிருந்த சசிகலா அங்கு அவருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையிலேயே இருந்திருக்கிறார்.

மூன்றாவது நாள் மட்டுமே உறவினர்களுடன் பேசியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, கணவர் நடராஜனை மருத்துவமனையிலும் சென்று நலம் விசாரித்திருக்கிறார்.

மேலும் தினகரன், ஜெயானந்திடம் அரசியல் நிலவரம் குறித்துப் பேசியதாகவும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளைக் கேட்டு ஆத்திரமடைந்து, அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்றும் கூறியதாகத் தகவல்கள் கூறுகின்றன.