மெல்பர்ன் – ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள பிரைட்டான் பகுதியில், டெண்டி ஸ்ட்ரீட் கடற்கரை உள்ளது.
அங்கு, 16 வயது இளைஞரான சாம் கனிசே, காற்பந்து விளையாடிவிட்டு, கடலில் காலை நனைத்திருக்கிறார். சுமார் 30 நிமிடங்கள் கழித்து காலைப் பார்த்தவருக்கு பேரதிர்ச்சி.
காரணம், கால் முழுவதும் இரத்தமாக இருந்ததோடு, கால் தோல் பிய்க்கப்பட்டு, அதிலுள்ள தசைகள் கிழிக்கப்பட்டிருந்தன.
உடனடியாக, சாமின் தந்தை ஜாரோட் கனிசே, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர்.
பின்னர், அதிகாரிகள் கடற்பகுதியில் ஆய்வு செய்த போது, கடலில் ஆயிரக்கணக்கான கடல் நுண்ணுயிரிகள் இருந்தது கண்டறியப்பட்டது.