
மணிலா – உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து அணு ஆய்வு மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்க தேசியச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் வடகொரியாவுடன் பேசத் தயார் எனத் தெரிவித்திருக்கிறார்.
வாஷிங்டனின் இது குறித்து நேற்று திங்கட்கிழமை பேசிய அவர், பியோங்யாங்குடன் பேச விரும்புகிறோம். ஆனால் அதற்கு முன்பு அவர்கள் தொடர்ந்து அணு ஆய்வு மற்றும் ஏவுகணைச் சோதனைகள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று ரெக்ஸ் தெரிவித்திருக்கிறார்.