Home Featured தமிழ் நாடு காங்கிரசை கைவிட்டு பாஜக பக்கம் சாயும் திமுக!

காங்கிரசை கைவிட்டு பாஜக பக்கம் சாயும் திமுக!

506
0
SHARE
Ad

Stalin-and-Karunanidhi_0சென்னை – 2016 தேர்தலில் ஜெயலலிதாவை எப்படியும் தோற்கடித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக பல்வேறு முயற்சிகளை முன்வைத்து வருகிறது. அதற்கான யோசனைகளும், முன்னேற்பாடுகளும் அதிமுக வை விட பலமாக உள்ளதாகவே பொது நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டணி பேரம் நடத்தி வரும் திமுக, யாரும் எதிர்பார்க்க வண்ணம் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க அனைத்து ரகசிய ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

“‘நிபந்தனை எதுவுமின்றி கூட்டணி பேசத் தயார்” என, திமுக சார்பில் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிர்க்கும் விதமாக  காங்கிரஸ் தரப்பில் பேசிய இளங்கோவன், “கூட்டணி விஷயத்தில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யாருடன் கூட்டு என்றாலும், சில நிபந்தனைகளோடுதான் சேருவோம். அதில், கூட்டணி ஆட்சி என்பதும் ஒன்று” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

elangovan1இளங்கோவனின் இந்த அறிவிப்பால் எரிச்சல் அடைந்துள்ள திமுக, பாஜ பக்கம் திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜ-விற்கு மொத்தமாக 100 சீட்டுகள் (தொகுதிகள்), அதில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்பதே திமுகவின் கூட்டணி பேரம் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் இந்த யோசனையை பாஜவும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. பாஜ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒரே நிபந்தனை, ‘2 ஜி’ வழக்கு தொடர்பாக, எந்த உதவியும் செய்ய முடியாது என்பது தான்.

இப்படியாக தேர்தல் சூழல் ஒட்டுமொத்தமாக மாறியுள்ள நிலையில், அதிமுக தலைமை என்ன முடிவு செய்துள்ளது என்பது இன்னும் சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது.