Home Featured நாடு 1எம்டிபி குறித்த நேரடி விவாதத்துக்கு தயார்: டோனி புவா சவாலை ஏற்றார் அருள் கந்தா!

1எம்டிபி குறித்த நேரடி விவாதத்துக்கு தயார்: டோனி புவா சவாலை ஏற்றார் அருள் கந்தா!

753
0
SHARE
Ad

Arul-Kandasamyகோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்த தயாரா? என டோனி புவா விடுத்த சவாலை ஏற்பதாக அருள் கந்தா கந்தசாமி (படம்) தெரிவித்துள்ளார்.

1எம்டிபி தலைவரான அவர், சர்ச்சைகள் ஏதும் எழாத வகையில் பொதுக் கணக்குக் குழுவில் இருந்து முதலில் டோனி புவா விலக வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.
பெர்னாமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், டோனி புவா தாம் முன்பு எழுப்பிய புகார்களையே புதிய வடிவத்தில் மீண்டும் மீண்டும் சொன்னதாகவும், மக்களுக்கு உண்மை நிலை தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

tony-pua1-250613முன்னதாக டோனி புவா அளித்த பேட்டியில், 1எம்டிபி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யத் தயார் என்றும், அதில் தாம் கேட்கும் கேள்விகளுக்கு அருள் கந்தா பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

#TamilSchoolmychoice

“என் கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் (அருள் கந்தா) எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சவாலை ஏற்கத் தயாரா?” என புவால் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்தச் சவாலை ஏற்கத் தயாராக இருப்பதாக அருள் கந்தா தற்போது தெரிவித்துள்ளார்.

“புவாவின் சவாலை நான் ஏற்கிறேன். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் தருணத்தை எதிர்நோக்கியுள்ளேன். எனினும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர், எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்று தாம் கூறியதற்கேற்ப பொதுக் கணக்குக் குழுவிலிருந்து டோனி புவா விலக வேண்டும். இதைச் செய்வதற்கான தைரியம் அவருக்கு இருக்கும் என நம்புகிறேன்” என்று அருள் கந்தா மேலும் கூறியுள்ளார்.