Home Featured உலகம் விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகளால் வீழ்த்த முடியாது – ரஷ்யா உறுதி!

விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகளால் வீழ்த்த முடியாது – ரஷ்யா உறுதி!

646
0
SHARE
Ad

1280x960_51031C00-CZZXG_8111மாஸ்கோ – எகிப்தின் சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யா புறப்பட்ட KGL-9268 என்ற A-321 ஏர்பஸ் விமானம், நேற்று ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என 224 பேர் பலியாகினர். ஆரம்பத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக விமான விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இந்த சம்பவத்திற்கும், ஐஎஸ் இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

russiஇதற்கான காரணம் பற்றி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “ஐஎஸ் இயக்கத்தினரிடம் இருக்கும் ஆயுதங்களை வைத்து தாழ்வாகப் பறக்கும் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் மட்டுமே வீழ்த்த முடியும். ரஷ்ய விமானத்தின் சமிக்ஞைகள் சுமார் 31,000 அடி உயரத்தில் இருக்கும் போதே நின்று விட்டது. அதனால், ஐஎஸ் இயக்கத்தினரின் அறிவிப்பு நம்பும்படியாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளன.

அதற்கேற்ப, ஐஎஸ் இயக்கத்தினர் பொறுப்பேற்றுக் கொண்டனரே தவிர எவ்வித ஆதரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, விமானம் விழுந்த பகுதியில் இருந்து விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் இரு நாட்டு மீட்டுப்படைகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.