இது தொடர்பாக விளக்கம் அளிக்க இளங்கோவன் டெல்லி சென்றுள்ள நிலையில், விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “பதவி ஏற்ற மறுநாளே புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒருவருடம் கழித்து அளித்துள்ளனர். எனக்கு தொண்டர்கள் ஆதரவு உண்டு, அதனைக்கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறேனே தவிர, யாரையும் நம்பி நான் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த தலைவர் குஷ்பூவா?
இதற்கிடையே, ஒருவேளை இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அடுத்த தலைவராக குஷ்பூ நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.