Home Featured நாடு வெள்ளிக்கிழமை மகாதீரிடம் வாக்குமூலம் பெறுகிறது காவல்துறை!

வெள்ளிக்கிழமை மகாதீரிடம் வாக்குமூலம் பெறுகிறது காவல்துறை!

458
0
SHARE
Ad

Dr-Mahathir-Mohamedகோலாலம்பூர் – அம்னோ தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காவல்துறை விசாரணைக்கு அழைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மகாதீர் வரும் நவம்பர் 6-ம் தேதி காலக்கெடு அளித்திருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, வாக்குமூலத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மகாதீர் கைது செய்யப்படுவாரா? அல்லது வாக்குமூலம் பெறப்பட்ட பின்பு உடனடியாக திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவாரா? என்பது தற்போது கேள்விக்குறியாக வைக்கப்பட்டுள்ளது.