Home Featured இந்தியா மும்பையைக் கண்டு அஞ்சும் சோட்டா ராஜன்! டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சல்!

மும்பையைக் கண்டு அஞ்சும் சோட்டா ராஜன்! டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சல்!

590
0
SHARE
Ad

chottaபுதுடெல்லி – மும்பை காவல்துறைக்கு பல தாதாக்களுடன் தொடர்பு உள்ளது என்றும், அவர்கள் தன்னை கொல்ல வாய்ப்புள்ளதால் டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறும் சோட்டா ராஜன் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவிடமிருந்து சோட்டா ராஜனை கைப்பற்றி இந்தியா கொண்டு வர அதிகாரிகள் பாலி சென்றுள்ள நிலையில், அவரது கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை உள்துறை அமைச்சு தான் உறுதி செய்ய வேண்டும் என்று குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சோட்டா ராஜன் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் கூறுகையில், “இதற்கு முன்பு மும்பை போலீஸார் என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். மேலும் அவர்களில் பலருக்கு மற்ற தாதாக்களுடன் தொடர்பு உள்ளது. எனவே என்னை மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கக் கூடாது. எனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம்” என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

சோட்டா ராஜன் மீது டெல்லியில் 6 வழக்குகள்தான் உள்ளன. அதேசமயம், மும்பையில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.