Home கலை உலகம் “நாட்டில் மத ரீதியான சகிப்புத் தன்மை குறைந்து விட்டது” – ஷாருக்கான்

“நாட்டில் மத ரீதியான சகிப்புத் தன்மை குறைந்து விட்டது” – ஷாருக்கான்

1050
0
SHARE
Ad

shah-rukh-khan21புதுடில்லி  – பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று தனது 50-வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நிலவி வரும் மத ரீதியிலான பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தற்போது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஷாருக்கான் தனது பதிவில், “நாட்டில் தற்போது நிலவிவரும் மதரீதியான சகிப்புத்தன்மையற்ற நிலை பெரும் கவலையளிக்கிறது. இந்த நிலை தொடருமானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவது கடினம் தான்” என்று கூறியிருந்தார்.

ஷாரூக்கானின் இந்த கருத்து உண்மைநிலையை எடுத்துரைப்பதாக இருக்கிறது என ஒரு சாரார் கூறினாலும், பலர் ‘”ஷாருக்கான் பாகிஸ்தான் நாட்டின் ஏஜென்ட் போன்று பேசுகிறார்” என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் அவரது கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும் என பெண் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.