Home Featured கலையுலகம் அசத்தலான திரைப்படங்களோடு அஸ்ட்ரோவுடன் தித்திக்கும் தீபாவளி!

அசத்தலான திரைப்படங்களோடு அஸ்ட்ரோவுடன் தித்திக்கும் தீபாவளி!

682
0
SHARE
Ad

????????????????????????????????????

அஸ்ட்ரோ இந்த வருட தீபாவளியை ‘#adalahidlithosai’ உடன் கொண்டாடுகிறது. தீபாவளி என்றுமே உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒன்றாக  இணைந்து மகிழ்ந்து, உளமார ஒற்றுமையை பாராட்டும் திருநாளாகவே அமைகின்றது.

தீபாவளியில் மலேசியர்களின் கலாச்சாரமான “balik kampung”- இன் போது நாம் எதிர்ப்பார்ப்பது அம்மாவின் அன்பான வரவேற்பும், அவரின் அன்பில் உருவான சுவையான இட்டிலி, தோசை மற்றும் காரமான குழம்பும்தான். தீபாவளியன்று காலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் இட்டிலி மற்றும் தோசையை பறிமாறிக்கொள்வது வெறும் சாதாரண நினைவுகள் அல்ல. கடந்த கால நினைவுகளை அலசிக் கொண்டே புதிய நினைவுகளை பதிவு செய்யும் ஒரு நிகழ்வு.

#TamilSchoolmychoice

#adalahidlithosai மலேசியர்களுக்கே உரிய பாணியில் அம்மாவின் அன்பும், சுவையான உணவும், ஒற்றுமை மனப்பான்மையையும் பறைசாற்றுவதற்கான சிறந்த ஒன்று.

deepavali2

மேலும் உலகத்திலேயே மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை சிற்றுண்டியான இட்டிலியும், தோசையும் மலேசியர்களின் தீபாவளி பண்பாட்டில் ஒன்றாக திகழ்கிறது. #adalahidlithosai -hashtag என்பது உணவுகளின் சொர்க்கமான மலேசியாவில் இருக்கும் மலேசியர்களை இணைக்கும் ஒன்று.

வியாபார வகையில், என்றுமே சிறப்பான நிகழ்ச்சிகளையே அஸ்ட்ரோ அலைவரிசைகள் தீபாவளிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. விண்மீன் HD (அலைவரிசை 231) கண்களுக்கு துல்லிய ஒளிபரப்பையும், காதுகளுக்கு குறையில்லா டிஜிட்டல் ஒலியையும். அகண்ட திரையில் வண்ணமயமாக வழங்குவதில் முதலிடம் வகிக்கிறது.

அண்மைய வெளியீடான ஓ.கே கண்மனி, உத்தம வில்லன், 36 வயதினிலே, ரோமியோ ஜூலியட், மாஸ், வை ராஜா வை, நண்பேண்டா மற்றும் எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள்  #adalahidlithosai சிற்றுண்டிக்குப் பிறகு உங்கள் நாளை மேலும் சிறப்பாக கொண்டு செல்லும் சிறந்த படவரிசைகள் ஆகும்.

தொடர்ந்து முதல் முறையாக இந்திய சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’ துல்லிய அலைவரியில் உங்களின் வீட்டிலேயே ஒளிபரப்பாக உள்ளது.  சிவாஜியின் அனல் தெரிக்கும் வீர வசனங்களையும், முகத்திலே  விளையாடும் நவரசங்களையும் கண்டு களிக்க சிறந்த தருணம் இது. மேலும் என்றுமே மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள படங்களான ‘ காதல் கோட்டை’ மற்றும் ‘ துள்ளாத மனமும் துள்ளும்’ உங்களின் பழைய நினைவுகளை புதிதாய் அசைபோட இன்னொரு வாய்ப்பினை கொடுக்கும்.

தனித்தன்மை வாய்ந்த பலவித நிகழ்ச்சிகள், குறிப்பாக ‘காதல் முதல் கல்யாணம் வரை (சந்தனு, பாக்கியராஜ், கீர்த்தி), மறைந்த மனோரமாவுடனான நேர்க்காணல், மனம் கவரும் மனோ சித்ரா இசை நிகழ்ச்சி, அப்துல் கலாம் சிறப்பு நிகழ்ச்சி, தடம் பதித்தவர்கள் – ரஜினி மற்றும் கமல் சிறப்பு அங்கம், யுவன் மியூசிகள் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரசிகர்களை இடைவிடாது உற்சாகப்படுத்தும் நிகழ்வுகளாக அமையும்.