Home Featured கலையுலகம் வசூல்: தூங்காவனம் 4 கோடிதான்! வேதாளமோ 14 கோடி!

வசூல்: தூங்காவனம் 4 கோடிதான்! வேதாளமோ 14 கோடி!

979
0
SHARE
Ad

Vethalam Posterசென்னை: குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பதுபோல், தமிழ் நாட்டின் உச்ச நட்சத்திரமான கமலஹாசனையே முறியடித்துள்ளார் ‘தல’ அஜித் – நடிப்பில் அல்ல! வசூலில்!

தீபாவளியன்று திரைகண்ட கமலஹாசனின் தூங்காவனத்துடன் போட்டியில் இறங்கிய படம் அஜித்தின் ‘வேதாளம்’.

இரண்டு  படங்களின் முதல் நாள் உத்தேச வசூலை தமிழகத்தின் தகவல் ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

Toongavanam-posterஅதன்படி தூங்காவனம் முதல் நாள் வசூலாக நான்கு கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வசூலித்துள்ளது.

ஆனால், அஜித்தின் வேதாளமோ, 12 முதல் 14 கோடி ரூபாய் வரை முதல் நாளே வசூலித்துள்ளது.

இதன் மூலம் முதல் நாள் வசூலில் இதுவரை சாதனை புரிந்த படங்களாகப் பார்க்கப்படும் எந்திரன், லிங்கா, கத்தி ஆகிய படங்களின் வரிசையில் வேதாளமும் இணைந்துள்ளது.

தூங்காவனத்தை விட கூடுதலான வசூல் என்றாலும், வேதாளம் படம் தூங்காவனத்தைவிட அதிகமான பொருட்செலவில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.