Home Featured வணிகம் ஒரே நாளில் 14 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் – உலகை திரும்பிப் பார்க்க வைத்த அலிபாபா!

ஒரே நாளில் 14 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் – உலகை திரும்பிப் பார்க்க வைத்த அலிபாபா!

836
0
SHARE
Ad

alibaba1பெய்ஜிங் – உலக அளவில் இணைய வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்களையே ஒரேயடியாகத் தள்ளி நின்று பார்க்க வைத்த பெருமை சீனாவின் அலிபாபா நிறுவனத்தையே சாரும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் மக்கள் தொகை போல் அலிபாபா நிறுவனத்தின் வர்த்தகமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்நிறுவனம் நேற்று ஒரு நாளில் மட்டும் 14 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியான செய்திகள் உலக அளவில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தி உள்ளது. சறுக்கி வரும் சீன பொருளாதாரத்திற்கு தெம்பூட்டும் விதமாக அலிபாபாவின் இந்த வர்த்தகம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் காதலர்கள் தினத்தைக் கேலி செய்யும் வகையில் நவம்பர் 11-ம் தேதியை ‘சிங்கிள்ஸ் டே’ (Singles Day)-யாக கொண்டாடி வரும் நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட அலிபாபா, மிகப் பெரும் வர்த்தகப் புரட்சியை நிகழ்த்தி உள்ளது.

#TamilSchoolmychoice

சீனாவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த வர்த்தகம் எப்படி சாத்தியமாயிற்று என்று குழப்பங்கள் நிலவி வந்தது. ஆனால் அதற்கான விளக்கத்தை பிஎன்பி பரிபாஸ் எஸ்ஏ என்ற நிறுவனம் அளித்துள்ளது.

“சீனாவில் சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2015-ம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடைந்த மாதமும் அக்டோபர் தான். அந்த மாதத்தின் வளர்ச்சியே நவம்பரில் எதிரொலித்துள்ளது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது