Home Featured இந்தியா மோடியின் விளம்பர யுக்தியை போட்டுடைத்த ஆங்கில எழுத்தாளர்!

மோடியின் விளம்பர யுக்தியை போட்டுடைத்த ஆங்கில எழுத்தாளர்!

539
0
SHARE
Ad

modi-effect1லண்டன் – பிரிட்டன் பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகரும், பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான லேன்ஸ் பிரைஸ் ‘மோடி எஃபெக்ட்’ (Modi Effect) என்ற புத்தகத்தை எழுதி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார். ஆங்கில எழுத்தாளர் ஒருவர் இந்தியப் பிரதமர் பற்றிய உலக பார்வையை வெளியிட்டது நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் டைம்ஸ் இதழிற்கு அளித்துள்ள பேட்டியில், மோடி எஃபெக்ட் புத்தகத்தை எழுதுவதற்கு தனக்கு பணம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், அதற்கு முன்பு நரேந்திர மோடியை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் மோடிக்கு நெருக்கமானவர் ஒருவர் என்னை அணுகியதால் பணம் வாங்கிக் கொண்டு அந்த புத்தகத்தை எழுதியதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளையில் பணம் மொத்தமாக தனக்கு அளிக்கப்படவில்லையென்றும் இந்தியா வருவதற்கான விமானக்கட்டணம், தங்குமிடத்துக்கான செலவு போன்றவை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மோடி அரசு ரீதியாக இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், லேன்ஸ் பிரைசின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.