Home Featured உலகம் “அடுத்தது வாஷிங்டன் தான் எங்கள் இலக்கு” – ஐஎஸ் வெளியிட்டுள்ள மிரட்டல் காணொளி!

“அடுத்தது வாஷிங்டன் தான் எங்கள் இலக்கு” – ஐஎஸ் வெளியிட்டுள்ள மிரட்டல் காணொளி!

525
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைக் குறி வைத்துள்ளதாக ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.

அதற்கு அடுத்தகட்டத் தாக்குதலாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிஸ் நகரில் 7 இடங்களில் தூப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தங்களின் அடுத்த இலக்கு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். தங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் எந்த ஒரு நாட்டிற்கும் இது தான் கதி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.