மூன்றாம் மனைவி ப்ரூக் மியுல்லருடன் ஏற்பட்ட விவாகரத்துக்குப் பிறகு ஆபாச படங்களின் நாயகி ப்ரீ ஓல்சனுடன் நெருங்கிப் பழகி வந்த சார்லி போதைப் பழக்கத்திலும் சிக்கிக் கொண்டு தவித்தார்.
இந்நிலையில், அவருக்கு எச்ஐவி இருப்பதாக தற்போது டுவிட்டரில் பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. காரணம், அவரது காதலி ப்ரீ ஓல்சன் நேற்று தனது டுவிட்டரில் தான் எச்ஐவி பரிசோதனை செய்ததாகவும், அதில் அதிர்ச்சியடையும் தகவல் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இன்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ள சார்லி ஷீன், தனக்கு எச்ஐவி இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.