கோலாலம்பூர் – தென் -கிழக்கு ஆகியாவில் இளைஞர்கள் ஒன்றுபட்டு வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சகிப்புத்தன்மையை வளர்ப்பதிலும், கலாச்சார வேற்றுமைகளை அனுகுவதிலும், இளைஞர்கள் இன்னும் கூடுதலான மதநல்லிணக்கக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் மலேசியா வந்தடைந்த ஒபாமா, சுபாங் ஜெயாவில் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளம் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்றில் (Young South-East Asian Leaders Initiative – YSEALI) பேசும் போது இவ்வாறு தெரிவித்தார்.