Home Featured நாடு “மலேசியாவை மிகவும் நேசிக்கிறேன்” – பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிலாகித்த ரஜினி!

“மலேசியாவை மிகவும் நேசிக்கிறேன்” – பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிலாகித்த ரஜினி!

709
0
SHARE
Ad

Rajini_கோலாலம்பூர் – ‘கபாலி’ படப்பிடிப்பு ஒருபுறம், முக்கியஸ்தர்கள் மற்றும் ரசிகர்களுடன் சந்திப்பு ஒருபுறம் என மலேசியாவிலும் பரபரப்பாகவே இருக்கும்  ரஜினி, சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மலேசியாவில் தன்னுடைய அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:-

“மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. அதேசமயத்தில் மிகுந்த வலியையும் கொடுக்கிறது. வலி என்னவென்றால் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுக்க முடியாதது தான். நடைமுறையில் அது சாத்தியம் இல்லாததால் என்னால் அதனை செய்ய முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். எனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.”

#TamilSchoolmychoice

“மலேசியாவையும், மலேசிய மக்களையும் நான் மிகவும் விரும்புகிறேன். மலேசியா இவ்வளவு அழகாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 78-ல் (1978) ‘பிரியா’ படத்திற்காக நான் மலேசியா வந்தேன். அதன்பிறகு சுமார் 37 வருடங்கள் கழித்து நான் மீண்டும் இங்கு வந்துள்ளேன். மலேசியா மொத்தமாக மாறி விட்டது.”

“இங்கு நாங்கள் எடுத்திருக்கும் காட்சிகள் கண்டிப்பாக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த படத்தில் குறிப்பாக ‘கபாலி’ கதாப்பாத்திரம் மலேசியாவில் பிறந்து வளர்ந்தது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு மேலும் மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ரஜினியுடன், கபாலி படக்குழுவினர் மட்டுமல்லாமல், மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸீசும் உடன் இருந்தார்.