Home Slider விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா: இனிக்கிறது இத்தாலி

விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா: இனிக்கிறது இத்தாலி

736
0
SHARE
Ad

Nayanரோம் – தனது பிறந்தநாளையொட்டி ரோம் சென்ற நடிகை நயன்தாரா, அங்கு போப்பாண்டவரிடம் ஆசி பெற்றார் என்பது பழைய செய்தி. அவரது காதலர் என்று கூறப்படும் விக்னேஷ் சிவனும் உடன் சென்றிருந்த சங்கதி இப்போதுதான் தெரியவந்துள்ளது.

போப்பாண்டவரை சந்தித்த கையோடு இருவரும் இத்தாலியை வலம் வரத் தொடங்கியுள்ளனர். பிறந்தநாளன்று விக்னேஷ் சிவனுடன் மெழுகுவர்த்தி ஒளியில் இரவு விருந்து நிகழ்வில் பங்கேற்ற நயன்தாரா, அதே மகிழ்ச்சியில் அவருடன் தம்படம் ஒன்றும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அடுத்து வரும் தினங்களில் வெனிஸ், மிலன் என மேலும் பல நகரங்களுக்குச் சென்றுவிட்டு, இம்மாத இறுதியில்தான் நாடு திரும்ப உள்ளது நயன், விக்னேஷ் ஜோடி.

#TamilSchoolmychoice

“தனது அடுத்த படத்துக்கான வேலைகள் காத்திருந்தாலும், நயன்தாராவுக்காக அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இத்தாலி சென்றுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் பிறந்தநாளை சிறப்பான, மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரது ஒரே நோக்கம். விக்னேஷ் உடன் இருந்ததால், தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் செலவிட்டுள்ளார் நயன்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தவர்கள்.