Home Featured நாடு “ஒரே ஆசியா – அன்றே கூறியவர் சுவாமி விவேகானந்தர்” – சிலை திறப்பு விழாவில் மோடி!

“ஒரே ஆசியா – அன்றே கூறியவர் சுவாமி விவேகானந்தர்” – சிலை திறப்பு விழாவில் மோடி!

610
0
SHARE
Ad

Modiபெட்டாலிங் ஜெயா – இங்குள்ள மலேசிய இராமகிருஷ்ண இயக்கத்தின் கட்டிடத்தில் இன்று சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “தீர்க்கதரிசியான சுவாமி விவேகானந்தர் அன்றை ஒரே ஆசியா என்ற கண்ணோட்டத்தில் கனவு கண்டவர். அவரது அந்த கனவு இன்று நிறைவேறி வருகின்றது” என்று சுவாமி விவேகானந்தருக்கு புகழாரம் சூட்டினார்.

Modi 1

மாலை 4.30 மணியளவில் இராமகிருஷ்ணா இயக்கத்தின் தலைமையகம் வந்தடைந்த மோடி, திரைச் சீலைகளால் மூடி வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்து, பூக்களைத் தூவினார்.

#TamilSchoolmychoice

அதன்பின்னர், பிரத்தியேக மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மோடியை வரவேற்று இராமகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் சுவாமி சுப்ரியானந்தாஜி வரவேற்புரையாற்றினார்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, சிந்தனைகள், அவருக்கும் அவரது குரு இராமகிருஷ்ண பரஹம்சருக்கும் இடையிலான உறவு ஆகியவை குறித்து இந்தியில் உரையாற்றிய மோடியின் உரையை பெண்மணி ஒருவர் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

“ஒரே ஆசியா” என்ற சிந்தனையை அன்றே விதைத்தவர் சுவாமி விவேகானந்தர் என்றும் மோடி விவேகானந்தருக்கு புகழாரம் சூட்டினார்.

(மோடியின் விவேகானந்தர் உரை குறித்த விவரங்கள் தொடரும்)