Home Featured கலையுலகம் படம் வெளியாவதற்கு முன்பே கதாநாயகன் பலி – மலேசியாவில் துயரச் சம்பவம்!

படம் வெளியாவதற்கு முன்பே கதாநாயகன் பலி – மலேசியாவில் துயரச் சம்பவம்!

545
0
SHARE
Ad

பீடோர் – ‘க க க போ’ என்ற புதிய படத்தின் மூலமாக தமிழக சினிமாவில் அடியெடுத்து வைக்க இருந்த இளம் மலேசியக் கதாநாயகன் கேசவன் லட்சுமணசாமி, பீடோர் அருகேயுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் மலேசியர்களை மட்டுமல்ல, கோலிவுட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

புதுமுக இயக்குநர் விஜய் என்பவரின் இயக்கத்தில் கேசவன் கதாநாயகனாகவும், சாக்‌ஷி அகர்வால் என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அடுத்தவாரம், சென்னையில் இசைவெளியீடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பவர்ஸ்டார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் படத்தில் நடித்துள்ளனர்.

kakakapo

#TamilSchoolmychoice

இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தனது சொந்த ஊரான தெலுக் இந்தான் திரும்பிய கேசவன், கடந்த நவம்பவர் 21-ம் தேதி, பெற்றோருடன் பீடோர் அருகேயுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீருக்குள் விழுந்துவிட்ட கேசவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

அவரது மறைவை அறிந்த படக்குழுவினர் தற்போது மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.