Home கலை உலகம் “முதுமையை ஏற்க நான் தயார்” – பேச்சிலும் அழகி தான் ஏஞ்சலினா!

“முதுமையை ஏற்க நான் தயார்” – பேச்சிலும் அழகி தான் ஏஞ்சலினா!

729
0
SHARE
Ad

angelina-jolieநியூ யார்க் – ஹாலிவுட்டில் மறுக்க முடியாத, மறக்க முடியாத நடிகை என்றால் அது ஏஞ்சலினா ஜோலி தான். இவரது புற அழகுக்கு மட்டுமல்ல, அக அழகிற்கும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

சிரியா குழந்தைகளுக்காக குரல் கொடுப்பது, தீவிரவாதத்திற்கு எதிராக அழுத்தம் திருத்தமான கருத்துக்களைத் தெரிவிப்பது, புற்று நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் தனது மார்பகங்களையும், கருப்பையையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு, அது பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காக பொது வெளியில் அறிவித்தது என இவர் படங்களைப் போலவே இவரின் செயல்களும் அதிரடி தான்.

இந்நிலையில் 40-களில் இருக்கும் ஏஞ்சலீனா முதுமை குறித்து ஆழமான தனது கருத்தினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“நான் முதுமையை உணர்கிறேன். மூத்தவளாக இருப்பதற்கு தயாராகி விட்டேன். தற்போது நான் இளைமையாக இருப்பதற்கு விரும்பவில்லை. நான் வளர்ந்துவிட்டது மகிழ்ச்சி தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு பேட்டியில், “எனது பரம்பரையைச் சேர்ந்த பெண்களில், பெரும்பாலானவர்கள் இளம் வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், நான் தான் அதிக வயது வரை வாழ்ந்துள்ளேன்” என தனது சோகத்தையும் நேர்மறையாக கூறி பரவசப்படுத்தினார்.