Home கலை உலகம் பிராட்பிட்-ஏஞ்சலினா தம்பதி சிரியா குழந்தையை தத்தெடுக்க முடிவு!

பிராட்பிட்-ஏஞ்சலினா தம்பதி சிரியா குழந்தையை தத்தெடுக்க முடிவு!

793
0
SHARE
Ad

joliepittcmகாலிஃபோர்னியா – ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியான பிராட்பிட்-ஏஞ்சலினா ஜோலி நான்காவதாக ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளது. அப்படி தத்தெடுக்கப்பட இருக்கும் குழந்தை உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டைச் சேர்ந்ததாக இருக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

அகதிகளுக்கான ஐநா-வின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலினா, சமீப காலமாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களை நினைத்து பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என நினைத்த அவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், சிரியாவில் ஆதரவற்ற ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க ஏஞ்சலினாவும், பிராட்டும் முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

#TamilSchoolmychoice

angelina2-634x426இந்த தம்பதிக்கு குழந்தைகளை தத்தெடுப்பது ஒன்று புதிதல்ல. ஏற்கனவே கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 3 குழந்தைகளை இந்த ஜோடி தத்தெடுத்துள்ளது. இவர்களுக்கு 3 சொந்தக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வெகு விரைவில் இவர்கள் குடும்பத்தில் ஏழாவதாக இணையவிருக்கும் குழந்தை யார் என்பது தெரியவரும்.