Home உலகம் உக்ரேனில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

உக்ரேனில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

864
0
SHARE
Ad

கீவ் (உக்ரேன்) : ரஷியா தொடுத்திருக்கும் போர் காரணமாக, உக்ரேன் மீது அனைத்துலக அளவிலான ஆதரவும், அனுதாபமும் பெருகி வருகிறது.

ஹாலிவுட் நடிகர்கள் பலர் தங்களின் ஆதரவை உக்ரேன் மக்களுக்குப் புலப்படுத்தியுள்ளனர். அண்மையில் நடந்த ஆஸ்கார் விருதளிப்பு விழாவிலும் உக்ரேனுக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன.

இந்நிலையில், பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரேன் சென்றுள்ளார். அவர் எதற்காக சென்றார் என்பது அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவர் காப்பி உணவகம் ஒன்றில் காணப்பட்டதாகவும், அங்கு அவரை ஆச்சரியத்துடன் அணுகிய சிலருக்கு கையெழுத்திட்டுத் தந்ததாகவும் (ஆட்டோகிராப்) சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.