Home கலை உலகம் ஆஸ்ட்ரோ: மே மாதம் – முதல் ஒளிபரப்பாகும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ: மே மாதம் – முதல் ஒளிபரப்பாகும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள்

981
0
SHARE
Ad

 

  • மே மாதம் ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பாகும் மேலும் பல உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள் 
  • ஸ்டாண்ட்-அப் காமெடி, அதிரடி மற்றும் குற்றவியல் தொடர், மருத்துவ உரையாடல் நிகழ்ச்சி மற்றும் அன்னையர் தினச் சிறப்பு நிகழ்ச்சி

கோலாலம்பூர் : ஸ்டாண்ட்-அப் காமெடி, சிரிக்காதீங்க ப்ளீஸ்; அதிரடி திரில்லர் நாடகத் தொடர், அஸ்ட்ரா; மருத்துவ உரையாடல் நிகழ்ச்சி, வணக்கம் டாக்டர்; குற்றவியல் மர்மத் தொடர், பஸ் தி கேம்; மற்றும் அன்னையர் தினச் சிறப்பு நேரலை நிகழ்ச்சி, அகிலமும் நீ…அம்மா உள்ளிட்ட முதல் ஒளிபரப்பாகும் மேலும் அதிகமான உள்ளூர் நிகழ்ச்சிகளை டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

#TamilSchoolmychoice

முதல் ஒளிபரப்புக் காணும் பின்வரும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:

சிரிக்காதீங்க ப்ளீஸ்

• சுரேஷ் (ராகா), அசுராஜன் என்ற அசு, பிரவினா ரகுநாதன் மற்றும் ஹிந்த்ரா போஸ் போன்ற உள்ளூர் நகைச்சுவை நடிகர்களைக் கொண்ட முதல் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சி, சிரிக்காதீங்க ப்ளீஸ், மே 3, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

“அஸ்ட்ரா” – அதிரடி திரில்லர் தொடர்

• உள்ளூர் திரைப்பட இயக்குநர், ருபீந்திரன் நாயர் கைவண்ணத்தில் மலர்ந்தத், தைரியமானச் சண்டைக்காட்சிகளுடன் கூடிய அதிரடித் திரில்லர் நாடகத் தொடர், அஸ்ட்ரா, பிரபல உள்ளூர் திறமைகளான இர்ஃபான் ஜைனி, யாஸ்மின் நதியா, கர்ணன் ஜி கிராக் மற்றும் பல நடிகர்களைத் தாங்கி மலர்கின்றது. துப்பறியும் நபர்களை வேட்டையாடுவதைக் குழப்பும் வகையில் தொடர்ச்சியானக் குற்றங்களை நடத்தும் கூலிப்படையைப் பற்றியச் சுவாரசியமானக் கதையை இந்தத் தொடர் சித்தரிக்கின்றது.

அஸ்ட்ரா, மே 2, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

“வணக்கம் டாக்டர்” மருத்துவத் தொடர்

• மருத்துவ உரையாடல் நிகழ்ச்சியான, வணக்கம் டாக்டர், புதியத் தொகுப்பாளரான டாக்டர் புனிதன் ஷானை அறிமுகப்படுத்துகிறது. மலேசியர்களிடையே பொதுவாகப் படர்ந்திருக்கும் நோய்களானப் புற்றுநோய், உடல் பருமன், எச்.ஐ.வி, நீரிழிவு மற்றும் பலவற்றைப் பற்றிய நுண்ணறிவை வழங்குவதோடு அதன் அறிகுறிகள், நோயறிவதற்கானச் சோதனைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

நோய்களை வெற்றிகரமாக எதிர்க்கொண்டு உயிர் பிழைத்தவர்களின் எழுச்சியூட்டும் கதைகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். வணக்கம் டாக்டர், மே 2, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

“பஸ் தி கேம்” – குற்றவியல் மர்மத் தொடர்

• உள்ளூர் இயக்குநர், லோயேஸ்வரன் மகாலிங்கம் கைவண்ணத்தில் மலர்ந்தக் குற்றவியல் மர்மத் தொடர், பஸ் தி கேம், சுதாகர் சாக், நற்குணலிங்கம் நெசனராவனன், ஸ்ரீதரன் சங்கர் மற்றும் பல திறமையான உள்ளூர் கலைஞர்களைத் தாங்கி மலர்கின்றது. 30 மாணவர்களுடன் ஒரு பள்ளிப் பேருந்து மர்மமான முறையில் காணாமல் போவதைப் பற்றியக் கதையை இந்தத் தொடர் சித்தரிக்கின்றது. பஸ் தி கேம், மே 2, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

“அகிலமும் நீ…அம்மா” அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி

நமது நலனுக்காகப் பலத் தியாகங்களைச் செய்தத் தங்களின் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, உள்ளூர் திறமையாளரான அருணா ராஜ் தொகுத்து வழங்கும் அகிலமும் நீ… அம்மா எனும் அன்னையர் தினச் சிறப்பு நேரலை நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் பங்கேற்கலாம்.

03-95437180 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் தங்கள் வாழ்த்து மடல்களைத் தெரிவிக்கலாம். மேலும், சிறப்பு நிகழ்ச்சிகள், தாய்-மகள் நேர்காணல்கள் மற்றும் பலவற்றைக் கண்டு மகிழலாம். அகிலமும் நீ… அம்மா நிகழ்ச்சியை, மே 8, மதியம் 1 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) நேரலையில் கண்டுக் களிக்கலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.