Home Featured கலையுலகம் ஏஞ்சலினா ஜோலியின் அடுத்த காதலர் யார்?

ஏஞ்சலினா ஜோலியின் அடுத்த காதலர் யார்?

926
0
SHARE
Ad

brad-pit-angelina-jolie

ஹாலிவுட் – கவர்ச்சியிலும், நடிப்பிலும், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் ஹாலிவுட் படங்களில் கொடி கட்டிப் பறப்பவர் ஏஞ்சலினா ஜோலி. மற்றொரு புகழ்பெற்ற நடிகரான பிராட் பிட்டுடன் அவர் இணைந்த காலம் முதல் ஹாலிவுட்டின் முதல்நிலை நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் அவர்கள்.

பிராட் பிட்-ஏஞ்சலினா என இரு பெயர்களையும் இணைத்து ‘பிராஞ்சலினா’ (Brangelina) என்ற பெயரில் ஹாலிவுட் வட்டாரங்களில் அழைக்கப்பட்டனர் அவர்கள்.

#TamilSchoolmychoice

இருவருக்குமே பல பிரபலங்களுடன் காதல் – ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கை என பல பின்னணிக் கதைகள் உண்டு.

யார் கண் பட்டதோ தற்போது இருவரும் விவாகரத்துக்கு மனுச் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இரண்டு முறை திருமணமான ஏஞ்சலினாவின் புதிய காதலர்-கணவர் யாராக இருக்கக்கூடும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

brad-pit-angelina-jolie-childrenபிராட் பிட் – ஏஞ்சலினா தங்களின் குழந்தைகளுடன்…

ஏஞ்சலினாவின் கவர்ச்சிக்கு அடிமையான இரசிகர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். முத்தக் காட்சிகள், நிர்வாணக்காட்சிகள் என எதிலும் குறைவைக்காமல் கவர்ச்சி காட்டி வலம் வந்தவர் ஏஞ்சலினா.

பின்னர், சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘சால்ட்’ போன்ற படங்களில் துப்பறியும் அதிகாரியாக நடித்தும் இரசிகர்களைக் கவர்ந்தார்.

angelina-jolie

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித் என்ற படத்தில் பிராட் பிட்டுடன் நடித்தபோது இருவருக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியது.

உலகின் ஏழ்மையான நாடுகளிலிருந்து குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பவர் ஏஞ்சலினா. அவருக்கும் பிராட் பிட்டுக்கும் இடையில் நான்கு குழந்தைகள் பிறந்தார்கள். மேலும் இரண்டு குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்தார்கள்.

இந்நிலையில் அந்த ஆறு குழந்தைகளும் தன்வசமே இருக்க வேண்டும் என தனது விவாகரத்து விண்ணப்பத்தில் கோரிக்கை வைத்திருக்கின்றார் ஏஞ்சலினா.

சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் ஏஞ்சலினா. அவரது தாயாருக்கு மார்பகப் புற்று நோய் இருந்ததால், தனக்கும் அந்நோய் வரலாம் என அஞ்சி தனது இரு மார்பகங்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டவர் ஏஞ்சலினா.

jennifer-aniston

பிராட் பிட்டின் முன்னாள் காதலி – ‘பிரெண்ட்ஸ்ய புகழ் ஜெனிபர் அனிஸ்டன்…

பிராட் பிட் ஏஞ்சலினாவை மணந்து கொள்வதற்கு முன்னால் நீண்ட காலம் ஜெனிபர் அனிஸ்டன் என்ற நடிகையுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ‘பிரெண்ட்ஸ்’ என்ற தொலைக்காட்சி நாடகத் தொடர் மூலம் புகழின் உச்சியில் இருந்தவர் ஜெனிபர் அனிஸ்டன்.

இவ்வாறாக, பிராட் பிட், ஏஞ்சலினா இருவருமே பலருடனான காதல் பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால், அடுத்து இவர்கள் இருவரின் காதல் பயணம் யாருடன் தொடரும் என்பதைக் காண ஹாலிவுட் வட்டாரங்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றன.

விவாகரத்துக்கான காரணத்தையும் இருவரும் இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

அடுத்த சில வாரங்களுக்கு பிராட் பிட், ஏஞ்சலினா ஜோடியைப் பற்றிய ஆரூடங்கள், கதைகள்தான் ஹாலிவுட் வட்டாரங்களில் வலம் வரும் என்பது நிச்சயம்!

-செல்லியல் தொகுப்பு