Home Featured நாடு அந்தப் ‘பென்டிரைவ்’ பற்றி எனக்குத் தெரியாது – அமெரிக் சித்து தகவல்!

அந்தப் ‘பென்டிரைவ்’ பற்றி எனக்குத் தெரியாது – அமெரிக் சித்து தகவல்!

707
0
SHARE
Ad

Kevinகோலாலம்பூர் – கொலை செய்யப்பட்ட அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சகோதரர் சார்லஸ் சுரேஷ் மொராயிஸ், தனது சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டிருந்த அந்த பென் டிரைவில்(தகவல் சேமிப்புக் கருவி) உள்ள தகவல்கள் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என சார்லசின் வழக்கறிஞர் அமெரிக் சித்து தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 25-ம் தேதி கெவின் மொராயிஸ் கொலை தொடர்பில் சார்லஸ் அளித்த சத்தியப் பிரமாணத்தில், அரசாங்கத்திலுள்ள முக்கியப் புள்ளிகளின் இரகசிய விவகாரங்கள் அடங்கிய பென் டிரைவ் ஒன்றை தனது சகோதரர் தன்னிடம் அளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அந்தச் சத்தியப் பிரமாணம் தொடர்பில் அமெரிக் சித்துவிடம் காவல்துறை இன்று விசாரணை நடத்தியது.

#TamilSchoolmychoice

அதில், கெவின் மொராயிஸ் மாயமான செப்டம்பர் மாதமே சார்லஸ் தன்னை அனுகியதாகவும், எனினும், இப்படி ஒரு சத்தியப் பிரமாணத்தை அளிக்கப் போகிறார் என்பது தனக்கு நவம்பர் 24-ம் தேதி அன்று தான் தெரியும் என்றும் அமெரிக் சித்து தெரிவித்துள்ளார்.