சாவோஸின் மறைவையடுத்து கடந்த செவ்வாயன்று தேசிய தேர்தல் வாரியம் பிரதமர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. வெனிசூலா அரசியல் சட்டப்படி ஒரு தலைவர் இறந்துவிட்டால் 1 மாதத்திற்குள் ஒரு புதிய, நேரடியான தேர்தலை நடத்தியாக வேண்டும்,
தனது மனுத்தாக்கலின் போது பேசிய மதுரோ, தாம் மறைந்த அதிபர் ஹியூகோ சாவோஸின் கட்டளைப்படியே நடப்பதாகவும்,அவர் வழியைப் பின்பற்றி வெற்றிப் பாதையை அடையப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மதுரோ கூறுகையில் தான் சாவோஸிசின் மகன் ஸ்தானத்தில் இருந்து அவர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, அவரது முக்கியமான ஐந்து குறியிலக்கை அடையும் முயற்சியையும் தொடரப்போவதாகத் தெரிவித்தார்.
அவர் தேர்தல் பரப்புரையின் போது வன்முறையில்லாமல் அமைதியை கடைபிடிக்கும்படி தமது ஆதரவாளர்களை கேட்டுக்கோண்டார்.
ஏப்ரல் 14, தேர்தல் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 14 நாட்கள் பரப்புரை செய்ய மனுதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் மதுரோ கடந்த முறை சாவோஸிடம் தோல்வியுற்ற எதிர்க்கட்சித்தைவர் ஹென்றிக் கேப்ரில்ஸை பிரதமர் தேர்தலில் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.