Home உலகம் வெனிசூலா தேர்தல் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வெனிசூலா தேர்தல் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

606
0
SHARE
Ad

maduroகாரகாஸ், ஏப்ரல் 17- வெனிசூலா அதிபர் தேர்தலில் சாவேஸின் அரசியல் வாரிசான நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டன.

தலைநகர் காரகாஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மண் பானைகளை உடைத்தும், குப்பை பைகளை தீ வைத்து எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நிக்கோலஸ் மதுரோ மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். வெனிசூலா தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் ஹென்றிக் கேப்ரியல்தான் உண்மையான வெற்றியாளர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

வெனிசூலா அதிபராக இருந்த சாவேஸ், புற்றுநோயால் கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து அங்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் சாவேஸின் கட்சியைச் சேர்ந்த நிக்கோலஸ் மதுரோ வென்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 1 கோடியே 49 லட்சம் வாக்குகள் பதிவாகின. இதில்  மதுரோவுக்கு 50.66 சதவீத வாக்குகளும், ஹென்றிக் கேப்ரியலுக்கு 49.1 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2 லட்சத்துக்கு 65 ஆயிரம்தான். இதனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹென்றிக் கேப்ரியலும் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.