காரகாஸ், ஜூன் 16- வெனிசுலாவில் புதிதாக அதிபர் பதிவியேற்றுள்ள நிகோலஸ் மதுரோ, துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் புதிய மசோதாவில் கையெழுத்திட்டார்.
29 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வெனிசுலாவில் 2009-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 15 மில்லியன் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 3 ஆயிரத்து 400 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.
இதனை கட்டுப்படுத்த வெனிசுலா நாட்டின் புதிய அரசு துப்பாக்கி காட்டுபாட்டு மசோதாவை எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்களை விற்பவர்கள் மற்றும் வைத்திருப்பவர்களுக்கு 20 வருடம் வரை ஜெயில் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.