Home இந்தியா பீகார் அரசில் இருந்து பா.ஜனதா விலகல்: 17 ஆண்டு கூட்டணி உடைந்தது

பீகார் அரசில் இருந்து பா.ஜனதா விலகல்: 17 ஆண்டு கூட்டணி உடைந்தது

580
0
SHARE
Ad

பாட்னா, ஜூன் 16- பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைப்படுத்த முடிவு செய்து இருப்பதால் பாரதீய ஜனதாவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் கருத்து வேறுபாடு உருவானது. ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நரேந்திர மோடியை பாரதீய ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவராக நியமித்தது.

Nitish-Kumarஇதனால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தது. அந்த கட்சி தலைவர்கள் சரத் யாதவ், பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் ஆகியோருடன் அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். பாரதீய ஜனதாவின் நிலையை எடுத்துக் கூறினார்கள். சமரச முயற்சியை சரத்யாதவும், நிதிஷ்குமாரும் புறக்கணித்துவிட்டனர். இதனால் கூட்டணி உடைவது உறுதியாகிவிட்டது.

modi-narendraபீகாரில் நிதிஷ்குமார் அரசில் பாரதீய ஜனதா இடம் பெற்றுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த சுஷில்குமார் மோடி துணை முதல்- மந்திரியாக இருக்கிறார். பாரதீய ஜனதா மந்திரிகளும் இடம் பெற்றுள்ளனர். பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலக முடிவு செய்து இருப்பதால் நிதிஷ்குமார் அரசில் இருந்து பாரதீய ஜனதாவும் விலக முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

சுஷில்குமார் மோடி உள்பட அனைத்து பாரதீய ஜனதா மந்திரிகளும் கூண்டோடு விலகுகிறார்கள். பாரதீய ஜனதா மந்திரிகள் ஏற்கனவே அலுவல் பணிகளை கவனிக்கவில்லை. அரசு கார்களையும் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. மந்திரிசபை கூட்டம் இந்த நிலையில் முதல்- மந்திரி நிதிஷ்குமார் இன்று பகல் மந்திரிசபை கூட்டத்தை கூட்டினார். இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

ஆனால் பாரதீய ஜனதா மந்திரிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்கள் சுஷில்குமார் மோடி தலைமையில் தனியாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். பாரதீய ஜனதா மந்திரிகள் இல்லாமல் நிதிஷ்குமார் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இரு தரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. பாரதீய ஜனதா கூட்டத்தில் நிதிஷ்குமார் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்படுகிறது.

அதேபோல் பாரதீய ஜனதா மந்திரிகளை நீக்கும் முடிவை நிதிஷ்குமார் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் 17 ஆண்டுகளாக நீடித்து வந்த பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிகிறது. பீகாரில் பாரதீய ஜனதா ஆதரவு வாபஸ் பெற்றாலும் நிதிஷ்குமார் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தில் 118 உறுப்பினர்களும் பாரதீய ஜனதாவுக்கு 91 உறுப்பினர்களும் உள்ளனர்.

பாரதீய ஜனதா வெளியேறிய பின்பு நிதிஷ்குமார் ஆட்சியில் நீடிக்க 4 எம்.எல்.ஏ.க்களே தேவைப்படுகிறார்கள். 6 சுயேச்சைகள் நிதிஷ்குமாரை ஆதரிக்க முன்வந்துள்ளனர். எனவே சுயேச்சைகள் ஆதர வுடன் நிதிஷ்குமார் ஆட்சியில் நீடிப்பார்.