Home கலை உலகம் மணிவண்ணன் உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி

மணிவண்ணன் உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி

881
0
SHARE
Ad

சென்னை, ஜூன். 16- பிரபல நடிகரும் இயக்குனருமான  மணிவண்ணன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகர் ஜெய் பாலாஜி நகர், திருமலை தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மணிவண்ணன்பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஜே.கே.ரித்தீஷ் எம்.பி., தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், நடிகர்கள் சத்யராஜ், பாக்யராஜ், சுந்தர்.சி, சிவா, சிபிராஜ், ஷக்தி, சாந்தனு, சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், குமரிமுத்து, நடிகைகள் சரண்யா, அனுதாரா, டைரக்டர்கள் விக்ரமன், தங்கர்பச்சான், அகத்தியன், வி.சேகர், டி.பி.கஜேந்திரன், மனோபாலா, ராஜ்கபூர் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று காலை மணிவண்ணன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகை குஷ்பு, நடிகர்கள் பாண்டியராஜன், கவுண்டமணி, டைரக்டர்கள் பாரதி ராஜா, ஹரி, சுபவீரபாண்டியன் ஆகியோரும் மணி வண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

#TamilSchoolmychoice

மணிவண்ணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மணிவண்ணன் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மணிவண்ணனின் உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.