Home Featured கலையுலகம் “10 லட்சம் கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம்” – ரஜினி குறித்து பிரபல இயக்குனர் கேலி!

“10 லட்சம் கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம்” – ரஜினி குறித்து பிரபல இயக்குனர் கேலி!

582
0
SHARE
Ad

rajini-varaசென்னை – சென்னை பேரிடருக்கு நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கி உள்ள நிலையில், பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சூப்பர் ஸ்டார் அளித்துள்ள 5 லட்சம், 10 லட்சம் பெரிய தொகையை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பியுள்ளனர். இதற்கு அவர் நன்கொடை அளிக்காமலேயே இருக்கலாம். பிரபலங்கள் குவின்டால் கணக்கில் பிரார்த்தனையையும், டன் கணக்கில் அன்பையும், கொஞ்சம் பணத்தையும் அளிக்கிறார்கள். ஏன் என்றால் பிரார்த்தனை மற்றும் அன்பு மலிவானது?”

“நான் ஒரு ரூபாய் கூட நன்கொடை அளிக்கவில்லை. இது போன்ற பிரபலங்களுக்கு மத்தியில் நான் மிகவும் சுயநலவாதி” என்று அவர் தெரிவித்துள்ளார்.