Home Featured தொழில் நுட்பம் இனி திறன்பேசியை சோப்பு தேய்த்து கழுவலாம் – ஜப்பான் நிறுவனம் சாதனை!

இனி திறன்பேசியை சோப்பு தேய்த்து கழுவலாம் – ஜப்பான் நிறுவனம் சாதனை!

597
0
SHARE
Ad

phonewaterproofடோக்கியோ – உலகம் முழுவதும் நீர் புகாத திறன்பேசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், முதல்முறையாக ஜப்பான் நிறுவனம் சோப்பைக் கொண்டு கழுவக் கூடிய திறன்பேசியினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் திறன்பேசியில், நமது பயன்பாட்டினால் உருவாகும் நுண்ணுயிரிகளை அழிக்க முடியும். அதே சமயம், திறன்பேசிகள் தவறி தண்ணீரில் விழுவது பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான கேடிடிஐ (KDDI) தான் இந்த திறன்பேசியினை கண்டு பிடித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் மேம்பாட்டுக் குழு, நாங்கள் உருவாக்கி உள்ள திறன்பேசியினை 700-க்கும் மேற்பட்ட முறை பரிசோதித்துள்ளது. இதன் மூலம், அதன் நீடிக்கும் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் ஜப்பானில் விற்பனைக்கு வரும் இந்த திறன்பேசியின் விலை 175 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.