Home Featured உலகம் “மலேசியாவில், ஒரு பெண் சிரித்தால் பின் தொடர அழைக்கிறாள் என்று அர்த்தம்” – ரிசல்மான்

“மலேசியாவில், ஒரு பெண் சிரித்தால் பின் தொடர அழைக்கிறாள் என்று அர்த்தம்” – ரிசல்மான்

759
0
SHARE
Ad

Muhammad Rizalman Ismailகோலாலம்பூர் – நியூசிலாந்தில் பெண்ணைப் பாலியல் பலாத்தாரம் செய்ய முயன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் மலேசியத் தூதரக அதிகாரி முகமட் ரிசல்மான் இஸ்மாயில், பெண் ஒரு ஆணைப் பார்த்து சிரித்தால், மலேசிய வழக்கத்தில் அவள் தன்னைப் பின்தொடர அழைக்கிறாள் என  அர்த்தம் என்று வெலிங்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மலேசியரான ரிசல்மான்  தனியா பில்லிங்ஸ்லே என்ற நியூசிலாந்துப் பெண்ணைப் பின் தொடர்ந்து அவரது வீடு வரை ஏன் சென்றார்? என அந்நாட்டின் அரச வழக்கறிஞர் (Crown prosecutor) கிராண்ட் பர்ஸ்டன் நீதிமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ரிசல்மான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தன்னைப் பார்த்து பில்லிக்ஸ்லே சிரித்ததால், தனக்கு அவர் சமிஞ்கை அளிக்கிறார் என நினைத்துக் கொண்டதாக ரிசல்மான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அவரது பேச்சில் தெரியவில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட விதம் மற்றும் அவர் புன்னகைத்த விதம் அவ்வாறு நினைக்க வைத்தது. மலேசிய வழக்கத்தில், ஒரு பெண் ஆணைப் பார்த்து சிரித்தால், அந்த ஆணைப் பற்றி தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறாள் என்று அர்த்தம்” என்று ரிசல்மான் கூறியுள்ளார்.