Home Featured கலையுலகம் “எச்ஐவியை மறைத்து தொடர்பில் இருந்தார்” – சார்லி மீது முன்னாள் காதலி வழக்கு!

“எச்ஐவியை மறைத்து தொடர்பில் இருந்தார்” – சார்லி மீது முன்னாள் காதலி வழக்கு!

495
0
SHARE
Ad

charlieலாஸ் ஏஞ்சல்ஸ் – “தனக்கு எச்ஐவி இருப்பதை மறைத்து தன்னுடன் தொடர்பில் இருந்தார்” என ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மீது அவரது முன்னாள் காதலிகளுள் ஒருவரான  ரோஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் சமீபத்தில் தனக்கு எச்ஐவி இருப்பதாக ஊடகம் ஒன்றில் நேரடியாக பேட்டி அளித்திருந்தார். இதன் காரணமாக அவரது காதலிகள் பலர் அவருக்கு எதிராக திரும்பினர். தனக்கு நோய் இருப்பதை மறைத்து, அவர் பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டினர். இதனால் அவர் பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தான், ரோஸ் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஸ்காட்டின் ரோஸ் என்ற அவர் பிரட் ரோசி என்ற பெயரில் ஆபாசப் படங்களில் நடித்து வந்தார். அப்போது தான் சார்லியுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ப்ரீ ஒல்சன் என்ற மற்றொரு ஆபாச பட நடிகையும் சார்லி மீது வழக்கு தொடரப் போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.